10 வருடங்களின் பின்னர் கிடைத்த மரணதண்டனை

கொலை குற்றவாளிக்கு 10 வருடங்களின் பின்னர் கிடைத்த மரணதண்டனை

by Staff Writer 24-04-2025 | 2:10 PM

Colombo (News 1st)  ​பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பையில் வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவத்தின் குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரை கொலை செய்து, பயணப்பையில் வைத்து பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.