.webp)
Colombo (News1st) சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமாகும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்களிடமிருந்தோ அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் இன்பாஸ் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.