நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை..

by Staff Writer 22-04-2025 | 10:41 AM

Colombo (News1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(22) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் இன்று 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனைய செய்திகள்