.webp)
Colombo (News1st) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் யாழ் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமாள்புரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்லிபுரம் - திருமாள்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இயக்கச்சி மற்றும் வல்லிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 21, 37 வயதான இருவரே அனுமதிப்பத்திரமின்றி மணலை அகழ்ந்து அதனை 2 லொறிகளில் ஏற்றும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்