யாழில் வயோதிப பெண் கொலை

யாழில் வயோதிப பெண் கொலை

by Staff Writer 21-04-2025 | 2:57 PM

Colombo (News1st)யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் பெண்ணொருவர் நேற்று(20) கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு திருட வந்த 20 வயதான இளைஞரால் 69 வயதான பெண் தடியினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.