.webp)
Colombo (News1st) ரயில் பாதையை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே உதவியாளர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
பரகும்புர மற்றும் அம்பேவெல இடையிலான ரயில் மார்க்கத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த உதவியாளர் மோதுண்டுள்ளார்.
தியத்தலாவையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.