.webp)
Colombo (News1st)
உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளை அடிப்படையாக கொண்டு பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகள் அதிகளவில் கறுவாவை கொள்வனவு செய்து வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது.
பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா ஏற்றுமதியை அதிகரிப்பதன் ஊடாக நாட்டிற்கு அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.