227 - தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் நிறைவு

227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் நிறைவு

by Staff Writer 18-04-2025 | 10:58 AM

colombo (News1st)

அனைத்து தபால்மூல வாக்குச்சீட்டுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் விநியோகித்து நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் ஏதேனுமொரு நீதிமன்றத்தினால் அது தொடர்பில் வழக்கு தீர்ப்பு வழங்கப்படுமாயின் குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தபால் மூல வாக்களிப்பு தாமதமாக வாய்ப்புள்ளது என அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இதுவரை 227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சிய 112 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை  விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

இதற்கமைய ஏப்ரல் 24, 25, 28, 29 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.