713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு

by Staff Writer 18-04-2025 | 12:37 PM

Colombo (News1st)வருடத்தின்  இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

685 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவான 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

103 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதிக்குள் 934 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த காலப்பகுதிக்குள் 23 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவான 126 வாகன விபத்துக்களில் 128 பேர் உயிரிழந்தனர்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு