.webp)
Colombo (News1st) திருகோணமலை ரயில் மார்க்கத்தின் சியம்பலன்கமுவ மற்றும் நேகம ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் மோதுண்ட யானையொன்று உயிரிழந்தது.
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தபால் ரயிலிலேயே யானை மோதுண்டுள்ளது.
இதனால் ரயில் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.