.webp)
Colombo (News1st) காஸா போரை நிறுத்துவதற்கு தம்மிடமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகளையும் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
இதற்கான கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால போர் நிறுத்த முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும் போர் நிறுத்தம் தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கும் 45 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு இஸ்ரேலினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஹமாஸ் நிராகரித்துள்ள நிலையில் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.