.webp)
Colombo (News1st) சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை, பயணிகளை தரம் குறைவாக நடத்தியமை, அதிக வேகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பான விசாரணகளையும் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்து முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் கொழும்பிற்கு திரும்புவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி வரை விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.