.webp)
Colombo (News 1st) கிளிநொச்சி - முழங்காவில் இரணைதீவு கடற்பரப்பில் நேற்று(16) அதிகாலை மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இரணைமாதா பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் நேற்று(16) கரைக்கு கொண்டுவரப்பட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.