.webp)
Colombo (News1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியது.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் பிரேமசந்திர ஹேரத் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்புப் பொதிகள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
06 மாவட்டங்களுக்கான பாதுகாப்புப் பொதிகள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாக பிரதி தபால் மாஅதிபர் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23, 24, ஆம் திகதிகளில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் 28, 29 ஆகிய திகதிகளில் தமது தபால் மூல வாக்கினை செலுத்த முடியும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.