ட்ரம்ப்பின் தீர்வைவரிகளுக்கு கலிபோர்னியா எதிர்ப்பு

ட்ரம்ப்பின் தீர்வை வரிகளுக்கு கலிபோர்னியா எதிர்ப்பு

by Staff Writer 17-04-2025 | 11:11 AM

Colombo (News1st ) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு எதிராக கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநரால் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரி விதிப்பின் காரணமாக கலிபோர்னியா மாநிலம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் Gavin Newsom தெரிவித்தார்.

அமெரிக்காவில் வரி விதிப்பிற்கு எதிராக அந்நாட்டு மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எவ்வாறாயினும் இந்த வழக்கை நிராகரிப்பதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் சமநிலையற்ற தன்மையை சீரமைப்பதற்காகவே புதிய வரிகள் விதிக்கப்படுவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிகளை தடுப்பதற்கு கலிபோர்னிய ஆளுநர் நேரம் செலவிடுவதாக வௌ்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பிற நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சர்வதேச அளவில் 5ஆவது பெரிய பொருளாதாரத்தை கலிபோர்னிய மாநிலம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.