சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரேமலால் விஜேரத்ன காலமானார்

by Staff Writer 17-04-2025 | 7:21 PM

Colombo (News 1st) ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலம் ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் செயற்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான பிரேமலால் விஜேரத்ன தனது 75ஆவது வயதில் காலமானார்.

'தவச' பத்திரிகையில் தனது ஊடக செயற்பாடுகளை ஆரம்பித்தமையின் மூலம் பிரேமலால் விஜேரத்ன ஊடகத்துறைக்குள் பிரவேசித்தார்.

பின்னர் இரிதா பெரமுண, மவ்பிம, ஜனயுகய, சண்டே லீடர் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்த அன்னார் பொலிஸ், சுகாதாரத்தை போன்று அரசியல் துறையைிலும் தடம்பதித்த ஊடகவியலாளராவார்.

சிரச ஊடக வலையமைப்பின் வானொலி பிரிவிலும் ஒரு தசாப்தத்திற்கும் அதிக காலம் சேவையாற்றிய அவர், சிரச செய்திப்பிரிவைக் கட்டியெழுப்பும் யுகத்திற்கும் வலுசேர்க்கும் வகையில் செயற்பட்டார். 

உயிரிழக்கும்போது அவர் 'மவ்ரட' பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்டார்.

பிரேமலால் விஜேரத்ன 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

அன்னாரது பூதவுடல் இன்றிரவு(17) முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இலக்கம் 240, வென்னவத்த வீதி, வெல்லம்பிட்டிய முகவரியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை பிற்பகல் 04 மணிக்கு கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.