.webp)
Colombo (News1st) 23 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்க பிரஜையொருவர் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்தபோது வர்த்தகர்களுக்கான பிரிவினூடாக வௌியேற முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் காணி விற்பனை நிறுவனமொன்றில் பணிபுரியும் 31 வயதான சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தமது பயணப் பையில் 23கிலோகிராம் குஷ் போதைப்பொருளை மறைத்துவைத்து கொண்டுவந்துள்ளா