.webp)
Colombo (News1st)யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரை பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே துப்பாக்கி மீட்கப்பட்டது.
அத்துடன் 5 தோட்டாக்களும் 10 வெற்று மெகஸின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் துருப்பிடித்து பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்