பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை

பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை

by Staff Writer 16-04-2025 | 10:41 AM

Colombo (News1st) 

2030ஆம் ஆண்டுக்குள் கைப்பொருள் உற்பத்தியில் 400 பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்கலைகள் பேரவை  தெரிவித்தது.

இதன்மூலம் 4,000 சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரவை தெரிவித்தது.

2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 வீத பங்களிப்பை இதன் மூலம் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.