சூரிய மின்கலத்தை செயலிழக்க செய்ய கோரிக்கை

குறுந்தகவலுக்கமைய மாத்திரம் சூரிய மின்கலத்தை செயலிழக்க செய்ய கோரிக்கை

by Staff Writer 16-04-2025 | 10:35 AM

Colombo (News1st)வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தை குறுந்தகவல் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் இன்றைய தினம் செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை குறுந்தகவலுக்கமைய மாத்திரம் சூரிய மின்கலத்தை செயலிழக்கச் செய்வது ​போதுமானதென மின்சார சபை தெரிவித்தது.

மின் கட்டமைப்பை பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்காக நேற்று முன்தினத்தில் இருந்து நாளாந்தம் மதியம் 3 மணித்தியாலங்கள் வீட்டின் கூரை மீது பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தை செயலிழக்கச் செய்யுமாறு மின்சார சபை அறிவித்திருந்தது.

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.