.webp)
Colombo (News1st) கண்டி பன்வில - அலகல்ல பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அலகொல ஆற்றுக்கு அருகில் இருந்து குறித்த சடலம் நேற்று(15) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த மாதம் 16ஆம் திகதி பெண்ணொருவர் காணாமல் போனமை தொடர்பில் பன்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பன்வில பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்