விண்வௌிக்கு சென்ற பெண்கள் குழு பூமிக்கு..

விண்வௌிக்கு சென்ற பெண்கள் குழு பூமிக்கு திரும்பியது

by Staff Writer 15-04-2025 | 12:03 PM

Colombo (News1st) 

விண்வௌியை சென்றடைந்த பெண்களை மாத்திரம் கொண்ட ப்ளூ ஒரிஜின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்

இலங்கை நேரப்படி நேற்றிரவு(14) 07 மணிக்கு இந்த குழு விண்வௌிக்கான தமது பயணத்தை ஆரம்பித்தது.

06 பேர் கொண்ட இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஒரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ரொக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

இந்தக் குழுவில் பொப் பாடகியான கெட்டி பெர்ரி, செய்தியாளர் கெய்ல் கிங், சிவில் உரிமைகள் சட்டத்தரணி அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ரொக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களுடன் ஆறாவது பெண்ணாக இந்தக் குழுவை வழிநடத்துபவரான ஜெஃப் பெசோஸின் காதலி லோரன் சான்செஸ் பயணித்துள்ளார்.

இந்த பயணம் சுமார் 11 நிமிடங்கள் மாத்திரமே நீடித்துள்ளதாகவும் விண்வெளியில் இருந்து பூமியின் அழகிய காட்சியைக் கண்டுகளித்த பின்னர் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.