அப்துல்லா அஹமட் பட்டாவி காலமானார்

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பட்டாவி காலமானார்

by Staff Writer 15-04-2025 | 5:34 PM

Colombo (News1st) மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பட்டாவி தனது 85ஆவது வயதில் நேற்று(14) காலமானார்.

22 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மஹதிர் மொஹமட் இராஜினாமா செய்ததையடுத்து 2003ஆம் ஆண்டு இவர் பதவியேற்றார்.

6 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றிய அப்துல்லா அகமது பட்டாவி மலேசியாவின் விவசாயத் துறையை மேம்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார்.

ஏனைய செய்திகள்