கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 15-04-2025 | 6:27 PM

Colombo (News1st)கலஹா - கொடகேபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய கொலபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.