.webp)
Colombo (News1st)திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவரான 'கரந்தெனிய சுத்தா'வின் பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற அதிகாரியை அவரது வீட்டின் முன் சுட்டுக் கொலை செய்த வழக்கில் சந்தேகநபர் மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏகநாயக்க முதியலன்சலாகே லக்கிந்து சந்தீப் பண்டார என்ற போலி பெயரில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் காலி, அம்பலாங்கெடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் நிதி மோசடி தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் என பொலிஸார் கூறினர்.