Formula 1 காரோட்ட பந்தயம்: Oscar Piastri வெற்றி

2025 போர்மியூலா வன் காரோட்ட பந்தயத்தில் அவுஸ்திரேலியாவின் Oscar Piastri வெற்றி

by Staff Writer 14-04-2025 | 10:50 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டு போர்மியூலா வன்(Formula 1) காரோட்டப் பந்தயத்திற்கான மற்றுமொரு கட்டம் பஹ்ரைனில் நடைபெற்றது.

57 வலயங்களைக் கொண்ட பந்தயத்தை அவுஸ்திரேலியாவின் Oscar Piastri வெற்றியீட்டினார்.

போட்டியை நிறைவு செய்ய அவர் ஒரு மணித்தியாலம் 35 நிமிடங்கள் 3.9 மில்லி செக்கன்களை எடுத்துக்கொண்டார்.

ஒஸ்கா பிலயஸ்ட்ரிக்கு கடும் சவால் விடுத்த பிரித்தானியாவின் George Russell ஒரு மணித்தியாலம் 35 நிமிடங்கள் 5 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தார்.

பிரித்தானியாவின் Lando Norris மூன்றாமிடத்தை பிடித்தார்.