பஸ் - லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஸ் - லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 14-04-2025 | 10:30 PM

Colombo (News 1st) திருகோணமலை கந்தளாய் - அக்போபுர பகுதியில் பஸ் மற்றும் லொறி ஆகியன மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலா சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.