விண்வெளிக்கு பயணமாகும் பெண்கள் குழு

விண்வெளிக்கு பயணமாகும் பெண்கள் குழு

by Staff Writer 13-04-2025 | 2:36 PM

Colombo (News1st)பெண்களை மாத்திரம் கொண்ட குழுவொன்று விண்வௌிக்கான தனது பயணத்தை நாளை(14) முன்னெடுக்கவுள்ளது.

06 பேர் கொண்ட இந்த குழுவை ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஒரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ரொக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்தது.

1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வோலன்டினா தெரெஸ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பின்னர் பெண்கள் மாத்திரம் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல்தடவையாகும்.

இந்த குழுவில் பொப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் சட்டத்தரணி அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ரொக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ஆறாவது பெண்ணாக இந்தக் குழுவை வழிநடத்துபவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லோரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார்.

இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் சுமார் 11 நிமிடங்கள் மாத்திரமே நீடிக்கும் என்பதுடன் விண்வெளியில் இருந்து பூமியின் அழகிய காட்சியைக் கண்டுகளித்த பின்னர் அவர்கள் மீண்டும் பூமியை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்