.webp)
Colombo (News1st) சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் கடந்த 8 ஆம் திகதி இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார்.
நபரொருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.