.webp)
Colombo (News1st) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) - நாளை மறுதினமும் (14) சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
கைதி ஒருவருக்கு போதுமான திண்பண்டங்கள், உணவு, சுகாதார பொருட்கள் அடங்கிய பொதியை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது..
சுகாதார வழிமுறைகளுக்கு அமைய உறவினர்கள் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி அனைத்து சிறைச்சாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியது.