அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரியை அதிகரித்த சீனா

அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரியை அதிகரித்த சீனா

by Staff Writer 09-04-2025 | 6:30 PM

Colombo (News 1st) அமெரிக்க இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரியை சீனா மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 34 வீத வரியை 84 வீதமாக அதிகரிக்கவுள்ளதாகவும் புதிய வரிகள் நாளை(10) முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.

சீன இறக்குமதிகளுக்கு 104 வீத வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக சீனாவால் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில நாடுகள் எதனையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா - அமெரிக்கா இடையே புதிய வரிகள் விதிக்கப்படுகின்றமையால் வர்த்தகப் போர் தொடர்ந்தும் வலுவடைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய செய்திகள்