.webp)
Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றிரவு(08) கைது செய்யப்பட்டார்.
ஒருவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.