.webp)
Colombo(News1st) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நாளை(08) வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று(07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை இழைத்துள்ளதாக தெரிவித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மாகாண சபையின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை பயன்படுத்தி முன்பள்ளிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாவை சேகரித்து அதனை தனது பெயரில் காசோலையூடாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மன்றில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.