.webp)
Colombo (News1st)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் நாளை(06) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தியப் பிரதமர் நாளை முற்பகல் அனுராதபுரம் ஜய ஶ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
நாளை காலை 7.30 முதல் முற்பகல் 10.30 வரையான காலப்பகுதிக்குள் அனுராதபுரம் நகரம், ஜய ஸ்ரீ மகா போதிய மற்றும் ரயில் நிலையத்தை அண்மித்த பிரதான வீதிகள் இடைக்கிடையே மூடப்படவுள்ளன.
நாளைய தினம் அனுராதபுரம் புனித பூமி பகுதிக்கு செல்லும் யாத்திரிகர்கள் சிரமமின்றி வழிபாடுகளை மேற்கொள்வதற்காக மாற்று வழிகளின் ஊடாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.