தேசபந்து தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை

தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணை

by Staff Writer 03-04-2025 | 1:05 PM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று(03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேசபந்து தென்னகோனை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த மாதம் 20ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.