.webp)
Colombo (News1st) மாத்தறை தெவிநுவர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வென்னப்புவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது வேனில் வந்த சிலரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் 28, 29 வயதான 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்