சட்டவிரோத சிகரெட்கள், துபானங்களுடன் இருவர் கைது

சட்டவிரோத சிகரெட்கள் மற்றும் மதுபானங்களுடன் இருவர் கைது

by Staff Writer 26-03-2025 | 10:49 AM

Colombo (News1st)சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வத்தளை - ஹெந்தல பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 24,400 வௌிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் வத்தளை - எடம்பொலவத்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 வௌிநாட்டு மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 27 வயதுக்கிடைப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டனர்.