முன்பள்ளிகளிலும் பொதுபாடத்திட்ட பரிந்துரைகரைகள்

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுபாடத்திட்ட பரிந்துரைகள் அறிமுகம்

by Staff Writer 26-03-2025 | 10:45 AM

Colombo (News1st) அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்பள்ளிகளுக்காக தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 13,000 பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளும் பதிவு செய்யப்படாத 3,000 முன்பள்ளிகளும் காணப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் முன்பள்ளி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்ட  புதிய பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கல்வியமைச்சின் பங்களிப்புடன் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

09 மாகாணங்களிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே கொள்கையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்தார்.