25 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன்

25 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கைது

by Staff Writer 18-03-2025 | 11:04 AM

Colombo (News1st) 25 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் வியாபாரத்தில் ஈடுபடும் அவர்கள் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் அவர்களின் பயணப்பையில் சூட்சுமமாக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

2 கிலோவும் 400 கிராமும் எடையுடைய குஷ் போதைப்பொருளை கைப்பற்றியதாக சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர்.