.webp)
Colombo (News1st) கொழும்பு கிராண்ட்பாஸ் - நாகலம் வீதியில் நேற்றிரவு(17) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸைச் சேர்ந்த 22, 28 வயதான 2 இளைஞர்களே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர்.
இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவவதுடன் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.