'பொடி சுத்தா' கொலை- விசாரணைக்கு 5 பொலிஸ் குழுக்கள்

'பொடி சுத்தா' கொல்லப்பட்டதேன்? பல கோணங்களில் விசாரணை

by Staff Writer 15-03-2025 | 5:19 PM

Colombo (News 1st) அம்பலாங்கொட, இடம்தொட்டவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘பொடி சுத்தா’ எனப்படும் நிஷாந்த மென்டிஸ் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 5 பொலிஸ்  குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

நேற்றிரவு(14) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘பொடி சுத்தா’ கொல்லப்பட்டார்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வௌியாகவில்லை.

அம்பலாங்கொட, இடம்தொட்ட திரிமாதுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘பொடி சுத்தா’ எனப்படும் நிஷாந்த மென்டிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வௌிநாட்டிலுள்ள 'சமன் கொல்லா' எனப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரினால் வழிநடத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.