பெண் வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு

பெண் வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு - சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவு

by Staff Writer 15-03-2025 | 5:28 PM

Colombo (News 1st) அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அனுராதபுரம் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை அடுத்த வழக்கு தினத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்ட வைத்தியரின் தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.