.webp)
Colombo (News 1st) கிராண்ட்பாஸ் - களணிதிஸ்ஸகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி உறவுமுறை சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் மற்றுமொரு தரப்பினருடன் இணைந்து சிலரை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறினர்.
22 மற்றும் 23 வயதுகளை உடைய சேதவத்தை பகுதியைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.