குடும்ப நட்பு நாடாக பெயரிடப்பட்ட இலங்கை

உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக பெயரிடப்பட்ட இலங்கை

by Staff Writer 12-03-2025 | 10:43 PM

Colombo (News 1st) இலங்கையை உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக Condé Nast Traveller பெயரிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப உதவும் அமெரிக்காவின் Remitly மீள்குடியேற விரும்புபவர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய குடிவரவு சுட்டெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, சுகாதாரத் தரம், பொருளாதார வலிமையிலிருந்து பாதுகாப்பு அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வரையான 24 காரணிகளில் 82 நாடுகளை தரவரிசைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் மொத்தம் 100 மதிப்பெண்களை வழங்குகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் கல்வியின் தரம் மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்தல் போன்ற தரவுப்புள்ளிகளைப் பார்ப்பதனூடான ​​ஒரு நாடு எவ்வளவு குடும்ப நட்புடன் உள்ளது என்பது கருத்திற்கொள்ளப்படுகின்றது. 

இதில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை அதன் கல்வி முறைமையினால் ஈர்க்கக்கூடிய மதிப்பெண்ணை பெற்றுள்ளதுடன் 10ஆவது இடத்திலுள்ள அமெரிக்காவில் வருடாந்தம் 16439.40 டொலர் செலவுடன் ஒப்பிடும் போது, ஆண்டொன்றுக்கு 354.60 டொலர் என்ற குறைந்த வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவையும் கொண்டுள்ளது. 

2025ஆம் ஆண்டில் குடும்ப நட்பு நாடுகள் பட்டியல் இலங்கை, சுவீடன், நோர்வே, நியூஸிலாந்து, ஐஸ்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என அமைந்துள்ளது.