தேஷபந்து தென்னகோனுக்கு பகிரங்க பிடியாணை

தேஷபந்து தென்னகோனை காணும் இடத்தில் கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை

by Staff Writer 11-03-2025 | 2:50 PM

Colombo (News 1st) ​தேஷபந்து தென்னகோனை காணும் இடத்தில் கைது செய்யுமாறு பகிரங்க  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நிதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையின்போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு வௌிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.