பிரபல பாடகர் Aloe Blacc நாட்டிற்கு வருகை

உலகப் புகழ் பெற்ற பாடகர் Aloe Blacc நாட்டிற்கு வருகை

by Staff Writer 10-03-2025 | 7:52 PM

Colombo (News 1st) உலகப் புகழ் பெற்ற பாடகரும் முதலீட்டாளருமான Aloe Blacc நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தந்துள்ள Aloe Blacc தனது விஜயத்தின் போது இலங்கையிலுள்ள கறுவா, மரமுந்திரிகை, தேங்காய் சார்ந்த உற்பத்தி பொருட்கள், உணவு, விவசாயம் உள்ளிட்ட நிபுணத்துவம் வாய்ந்த உள்நாட்டு தொழில்முனைவோரையும் சந்திக்க உள்ளார்.