5 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு புதிய நியமனம்

4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமனம்

by Staff Writer 09-03-2025 | 2:08 PM

Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வர் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய,

மட்டக்களப்பு பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் M.N.S.மென்டிஸ் 

மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.J.சேனாதீர

மொனராகலை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.M.A.P.களுபஹன

இரத்தினபுரி பிரிவிற்கான பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் D.M.M.A.B.மஹகிரிஉல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 5 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு புதிய நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த அனைத்து நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஏனைய செய்திகள்