கம்பஹா - கிரிந்திவிட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 4 குழுக்கள்

by Staff Writer 09-03-2025 | 3:06 PM

Colombo (News 1st) கம்பஹா - கிரிந்திவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்களில் வந்த இருவரால் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் இருந்த இருவர் மீது நேற்றிரவு(08) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.