.webp)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேர்வின் சில்வா நேற்றிரவு(05) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பத்தரமுல்லையிலுள்ள அவரின் இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் இன்று(06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.