.webp)
COLOMBO (News1st) இலங்கையின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையில் காலநிலைக்கு உகந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு விவசாய அபிவிருத்திக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் கூறியுள்ளார்.